[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வரலாற்றில் இன்று...கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினம்

today-in-history

தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் உயிரிழந்தார்.

குமரி மாவட்டம், தேரூரில் 1876-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27-ஆம் தேதி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்தார். ஒன்பதாவது வயதில் தனது தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார்.

பின்னர், கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார். நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’ எனவும் போற்றப்பட்டார்.

ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்று, பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினார். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

பைத்தியக்காரன், மணமகள், தாயுள்ளம், வேலைக்காரன், கள்வனின் காதலி, கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

1940-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டத்தை தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார். 1954-ஆம் ஆண்டு செட்பம்பர் 26-ஆம் தேதி தனது 78 வயதில் உயிரிழந்தார். 1954-ல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005-இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close