[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.... கடல் கடந்து இணைந்த மழலையர் நட்பு!

childhood-friendship

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஆண்டி மற்றும் ஷாரோன் தம்பதியினர் ஹான்னா என்ற 4 வயது சிறுமியை சீனாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து தத்தெடுத்தனர்.

ஹான்னாவின் பழைய புகைப்படங்கள் அனைத்திலும் அவளுடன் கைகோர்த்தப்படி ஒரு சிறுவன் இருந்தான். அனைத்து புகைப்படத்திலும் இருந்த அந்த சிறுவனை ஆண்டி மற்றும் ஷாரோன் தம்பதியினர் கவனித்தனர்.

உடனே அந்த காப்பகத்தை அணுகி அந்த சிறுவனை பற்றி விசாரித்தனர் அப்போது அவன் ஹான்னாவின் நெருங்கிய நண்பன் எனவும், இருவரும் காப்பகத்தில் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்ததாகவும், இருவரும் பிரிந்தது இல்லை எனவும் காப்பக உரிமையாளர் கூறினார்.

அதையடுத்து, ஹான்னாவை போன்று அந்த சிறுவனுக்கும் நல்ல ஒரு குடும்ப சுழலை உருவாக்கி தர முடிவு செய்தனர்.

அச்சிறுவனுக்கு டாசன் என பெயரிட்டு, அவனுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தத்தெடுக்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும் என அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் டாசனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த க்ளாரிஸ் குடும்பத்தினர் டாசனை தத்தெடுக்க முன்வந்தனர். இதன் மூலம் டாசனுக்கு ஒரு குடும்பம் அமைந்தது மட்டுமின்றி, டாசனும் ஹன்னாவும் மீண்டும் இணைந்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹன்னாவை சந்தித்த டாசன் இறுக்கிக் கட்டிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close