[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

நம் அன்றாட வேலைகளை சுலபமாக்க வரும் உலகின் முதல் 'ஸ்மார்ட் கடிகாரம்'!

world-s-first-smart-clock-glance

அலைபேசி முதற்கொண்டு அனைத்தும் ஸ்மார்ட் ஆகி வருகின்ற அந்த வரிசையில் சுவர் கடிகாரம் தற்போது இடம்பிடித்துள்ளது.

இந்த ஸ்மார்ட் சுவர் கடிகாரத்திற்கு ‘க்லான்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சுவர் கடிகாரத்தை வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் கருவிகளுடன் நம்மால் இணைக்க முடியும். இதன் மூலம் நம்முடைய அன்றாட வேலைகள் மேலும் சுலபமாகும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். ‘க்லான்ஸ்’ ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை 199 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாம் தூங்க வேண்டிய நேரம் எழ வேண்டிய நேரம் குறித்து நமக்கு நினைவூட்டுவதுடன் நமக்கான அனைத்து வேலைகள் குறித்தும் ‘க்லான்ஸ்’ நம்முடன் ஒரு மனிதனை போல உரையாட முடியும். மேலும் வானிலை குறித்த தகவல்களை நமக்கு வேண்டிய நேரத்தில் ‘க்லான்ஸ்’ அறிவிக்கின்றது.

வீட்டில் உள்ள அனைவருடைய ஆரோக்கியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நினைவூட்டும் வகையில் ‘க்லான்ஸ்’ வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சுவர் கடிகாரம் பிப்ரவரி மாதம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close