[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

வெற்றி ரகசியம் !

successful-tips

எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது.

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது. அணுகுமுறை எதிலிருந்து ஆரம்பிக்கிறது? எண்ணங்களிலிருந்து ஆரம்பிக்கிறது. எந்தப் பின்புலமும் இல்லாமல் தொடங்கி சிலர் அசகாய வெற்றிகளை எட்டியிருக்கிறார்களே, அந்த வெற்றிகள் எதிலிருந்து தொடங்கின தெரியுமா? அவர்களின் அபிப்பிராயங்களில் இருந்து!!

தாங்கள் வெறுமையான சூழலில் இருந்தாலும் அங்கிருந்து வெற்றியாளர்களாய் வளரமுடியும் என்ற அபிப்பிராயம்தான் அவர்களுடைய முதல் உந்து சக்தி. உற்சாகமே நம்மை உரிய இடத்தில் கொண்டு சேர்க்குமென உறுதியாய் நம்பியவர்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close