JUST IN
 • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
 • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
 • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
 • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
 • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
 • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
அறிவியல் & தொழில்நுட்பம் 27 Aug, 2016 03:04 PM

வாட்ஸ் அப் தொடர்பு எண்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்வது சாத்தியமா?..தெரிந்துகொள்வோம்!!

Cinque Terre

இன்றியமையாத தகவல்பரிமாற்ற செயலியாகியான வாட்ஸ்அப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து, பல மேம்படுத்துதல்கள் நடந்தாலும், எந்த லாபநோக்கமும் இல்லாதது போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு அதிர்ச்சி தகவலை வாட்ஸ் அப் தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ் அப் தொடர்பு எண்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துக்கொள்வது தான் அந்த தனியுரிமை கொள்கை. இதனால் பயனராகிய நமக்கு என்ன நன்மை என்பதையும் வாட்ஸ் அப் தெரிவிக்கிறது.. வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருக்கும் நபர் ஃபேஸ்புக்கில் இருந்தால், அவர் நம் ஃபேஸ்புக்கில் நண்பராக்கிக்கொள்ள பரிந்துரைக்கும். இதன் மூலம், தெரியாத நபர்களையோ, ஸ்பேம்களையோ தவிர்க்க முடியுமாம்.

அதேபோல், நம்முடைய எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் ஸ்டோர்களில் அக்கவுண்ட் வைத்திருந்தாலோ, அல்லது பொருட்களை பார்த்தாலோ.. அந்த எண்ணோடு தொடர்புடைய நம் ஃபேஸ்புக் பக்கத்தில், நாம் பார்த்த பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் இடம்பெறுமாம். ஆனால், தொலைபேசி எண்களை எந்த விதத்திலும் விற்கவோ ஃபேஸ்புக்கில் பகிரவோ மாட்டாது என்றும் தனது கொள்கை குறிப்பில் தெரிவித்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.

இது கூட பயனர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே ஃபேஸ்புக்குடன், தொடர்புகள் பகிரப்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தபடி, தேவையில்லாத வணிக தகவல்கள் அல்லாமல், வங்கி பரிவர்த்தனை , விமான டிக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல் பரிமாற்றங்களை அனுமதிக்கும் விஷயங்களும் புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த தனியுரிமை கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏற்கனவே வாட்ஸ் அப் எண்கள் பயனர் அனுமதி இன்றி, ஃபேஸ்புக்குடன் பகிரப்பட்டு வருவருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

தொடக்கத்தில் ஃபேஸ்புக்குடன் எவ்விதத்திலும் இணைக்கப்படாது என்று கூறிவந்த வாட்ஸ் அப், தற்போது வணிகத்திற்காக தொடர்பு எண்களை ஃபேஸ்புக்குடன் பகிருவது தனியுரிமையில் தலையிடுவதாக உள்ளதாக வல்லுநர் தெரிவிக்கின்றனர். அதேபோல், புதிய கொள்கை முடிவால், வணிக குறுந்தகவல்கள் வாட்ஸ் அப் வழியாக அனுப்புவதற்கும் வழிவகுக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads