செப்டம்பர் மாதத்தில் வோடாஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் கணிசமாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இதை தெரிவித்துள்ளது
கடந்த செப்டம்பர் மாதம் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 25 லட்சத்து 70 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியே 24 லட்சமாக குறைந்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 23 லட்சத்து 80 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில் அதன் வாடிக்கையாளர் மொத்த எண்ணிக்கை 32 கோடியே 55 லட்சமாக குறைந்துள்ளது.
அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 69 லட்சத்து 83 ஆயிரம் அதிகரித்து 35 கோடியே 52 லட்சத்தை தொட்டுள்ளது. பிஎஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரம் அதிகரித்து 11 கோடியே 69 லட்சமாக உள்ளது. செப்டம்பர் மாத சந்தைப் பங்கு நிலவரத்தில் வோடாஃபோன் ஐடியா 31.73%, ரிலையன்ஸ் ஜியோ 30.26%, பார்த்தி ஏர்டெல் 27.74% ஆக இருந்தது. பிற நிறுவனங்கள் 10.27% சந்தை பங்கை கொண்டுள்ளன.
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி
என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..?
“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்