சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 இன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்த திட்டம் அடுத்த நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்றும் சந்திரயான் 3 இன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்த கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறனுடனும் வடிவமைக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ பலமுறை முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி