சீனாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது 5 சேவையை தொடங்கியுள்ளனர்.
உலகப் பொருளாதாரத்தில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற வர்த்தக போர் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும் மோதல்கள் நடப்பது தொழில்நுட்ப வர்த்தகத்தில் தான். உலக அளவில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி தொழில்நுட்ப வர்த்தகத்தில் முதலிடத்தை பிடிப்பதற்கு சீனா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை முதலிடத்தை பிடிக்கவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதன் காரணமாகவே சீன நிறுவனமான ‘ஹவாய்’ நிறுவனத்தை கறுப்புப் பட்டயலில் அமெரிக்கா சேர்த்தது.
இந்த வர்த்தகப் போரின் அடுத்தகட்ட பதிலடியாக சீனா தற்போது 5ஜி சேவையை தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக சீனாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக சீனா மொபைல், சீனா யூனிகாம் மற்றும் சீனா டெலிகாம் ஆகியவை தங்கள் 5ஜி சேவையை தொடங்கியுள்ளன. அத்துடன் அவை 5ஜி சேவைக்கான ஆஃபர்களை அறிவித்துள்ளன. அதன்படி, ஒரு மாதத்திற்கு சேவைக்கான கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.1,289 முதல் ரூ.6,030 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 5ஜி சேவை தற்போதுள்ள 4ஜி சேவையை விட 10 முதல் 100 மடங்கு வேகமாக இருக்கும் எனப்படுகிறது.
இந்த சேவையை விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவர சீனா திட்டமிட்டிருக்கிறது. சீனாவில் 5ஜி சேவை தொடங்குவதற்கு முன்பே, அதனை பெறுவதற்காக 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்திருந்தனர். அடுத்த வருடம் முடிவிற்குள் இந்த எண்ணிக்கை 170 மில்லியனாக இருக்கும் என சீனா கணித்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 600 மில்லியன் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பயன்படுத்துவார்கள் எனவும் சீனா கணக்கிட்டுள்ளது. இந்த 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்குவதற்கு சீனாவும், அமெரிக்காவும் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நாடுகளில் இந்தியாவில் வர்த்தகத்தை பிடிக்கும் நாடு, உலக அளவு பொருளாதாரத்தில் முதல் இடம் பிடிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?