[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

பேஸ்புக்கில் 'லைக்-ஹைடிங்' ஆப்ஷன்: லைக்ஸை பார்க்க முடியாது!

facebook-hides-likes-in-australia-trial-to-ease-anxiety

பேஸ்புக்கின் பதிவுகளில் இருந்து விருப்பக் குறி (likes) களின் எண்ணிக்கையை ‌மறைப்பது தொடர்பான சோதனை, ஆஸ்தி ரேலியாவில் நடத்தியுள்ளது. 

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கை பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பான்மையானவர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன.  இப்போது ’லைக்-ஹைடிங்’ ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனர்கள் மத்தியில் நேர்மறையான கருத்துகளை ஏற்படுத்துவதற்காக, இந்த ஆப் ஷனை பேஸ்புக் அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 

பேஸ்புக் பயனர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அவர்களை பின் தொடர்வோர்கள் மற்றும் பிற பயனர்கள் லைக்ஸ்களை பதிவிடலாம். இது பயனர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக தகவல் வெளியானது. இதனால் பேஸ்புக் பதிவின் விருப்பக் குறிகளை (likes) யாரும் பார்க்க முடியாத அளவிற்கு "லைக்-ஹைடிங்" என்ற சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : FacebookAustralia
Advertisement:
Advertisement:
[X] Close