[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

‘சூப்பர் பூமி’யை கண்டுபிடித்த டெஸ் செயற்கைக்கோள்... உயிரினங்கள் வாழ முடியுமா..?

nasa-s-tess-satellite-discovers-super-earth-that-may-be-suitable-for-life

சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியை போன்ற வடிவம் கொண்ட 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை ஆராய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா Transiting Exoplanet Survey Satellite அதாவது TESS என்னும் செயற்கைக்கோளை கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தியது. அந்த செயற்கைக்கோளானது தற்போது பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள TOI 270 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஆய்வு செய்து வருகிறது. இதுவரை 21 புதிய கோள்களை டெஸ் கண்டுபிடித்துள்ளது.

இந்நி‌லையில் தற்போது பூமியிலிருந்து 31 ஒளியாண்டுகள் தூரத்தில் மூன்று கோள்களை டெஸ் கண்டுபிடித்துள்ளது. GJ 357 என்னும் நட்சத்திரத்தைச் சுற்றி இந்த மூன்று கோள்களும் வலம் வருகின்றன. இந்த கோள்களுக்கு GJ 357 b, GJ 357 c மற்றும் GJ 357 d என பெயரிடப்பட்டுள்ளது. GJ 357 நட்சத்தி‌ரமானது சூரியனை விட 40 சதவீதம் குறைவாகவே வெப்பத்தை கொண்டுள்ளது.

இதில் GJ 357 b கோளானது பூமியைப்போன்று 22 சதவிகித அளவில் பெரியதாகவும், 80 சதவிகிதம் பி‌ரமாண்டமானதாகவும் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சூப்பர் பூமி என இதனை அழைக்கின்றனர். நமது சூரியக்குடும்பத்தில் உள்‌ள புதன் மற்றும் சூரியன் இடையேயான தூரத்தைவிட இக்கோளுக்கும் GJ 357 நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தூரம் 11 சதவிகிதம் அதிகமாகும். சராசரி வெப்பநிலையாக 490 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் இந்தக் கோள் 3.9 நாட்களில் நட்சத்திரத்தை சுற்றிவருகிறது. பூமியைப் போன்ற உருவத்தை கொண்டுள்ளதால் இந்தக் கோளில் நீர் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பூமியிலிருப்பது போன்றே பாறைகள் GJ 357 b கோளிலும் உள்ளன. இதனால்‌ அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா அல்லது வாழ முடியுமா என்பது தொடர்பான ஆய்வில் ஈடுபடவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close