[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

“பிரச்னையை சரி செய்து விட்டோம்” - ஃபேஸ்புக் அறிவிப்பு

facebook-says-glitches-affecting-across-platforms-resolved

சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் சரி செய்யப்பட்டுள்ளது.  

வாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் பரிதவித்து வந்தனர்.

இந்தச் செயலிகளிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து முக்கியமான மூன்று சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் ட்விட்டர் பக்கம் குவிந்தனர். #facebookdown, #instagramdown, #WhatsAppdown  ஆகிய ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த நிலை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம்,“நேற்று எங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன. எனவே ஒரு சில இடங்களில் பயனாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தற்போது நாங்கள் சரி செய்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close