[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

சட்ட விதிகளை முறையாக பின்பற்றுகிறோம்- டிக்டாக்

tik-tok-reply-to-sasi-tharoor-about-law-and-ethics

டிக்டாக் செயலி மூலம் பயனர்களின் தகவல்களை சீன அரசு சட்டவிரோதமாக திருடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதற்கு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரின் நேரமில்லா நேரத்தில் பேசிய சசிதரூர், இந்தியாவின் தகவல்கள் ‘டிக்டாக்’ செயலி மூலம் கசிகின்றன என்றார். இது தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டார். 
நாட்டில் முறையான தகவல் பாதுகாப்பு இல்லாததால், ‘டிக்டாக்’ போன்ற சீன செயலிகள் மூலம் சீன அரசு சட்ட விரோதமாக தகவல்களைத் திருடி வருவதாகவும் சசிதரூர் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்க குழந்தைகள் குறித்த தகவல்களை ‘டிக்டாக்’ நிறுவனம் திருடியதற்காக அந்நாடு சுமார் 40 கோடி அபராதம் விதித்ததையும் சசிதரூர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்துள்ள டிக்டாக் நிறுவனம், தனியுரிமை மற்றும் பாதுகாப்புதான் தங்களின் முக்கிய நோக்கம் என்றும், தாங்கள் சட்ட விதிகளை முறையாக பின்பற்றி வருவதாகவும் பதிலளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close