[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

ரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை

redmi-note-7-pro-gets-6gb-ram-64gb-storage-variant-in-india-price-specifications

ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனின் புதிய ரகம் இன்று இந்தியாவில் வெள்யிடப்பட்டுள்ளது.

தற்போதைய காலக் கட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சீன நிறுவனமான ஜியோமி பல மொபைல்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக ரெட்மி மாடல் போன்களுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் ரெட்மி நோட் 7 ப்ரோ மாடாலின் புதிய ரகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 48 எம்பி மற்றும் 5 எம்பி என பின்புறத்தில் இரட்டைக் கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 13 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. மேலும், 4,000 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதன் விலை 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஃபிளிப் கார்ட் மற்றும் எம்.ஐ இணைய தளத்தில் விற்பனை தொடங்குகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close