[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

ஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது எப்படி? - சுவாரஸ்யமான வரலாறு!

how-the-atm-was-invented-by-john-shepherd-barron

உலக அளவில் ஏ.டி.எம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்து, இன்றுடன் 52ஆண்டுகள் கடந்து விட்டன. ஏடிஎம் இயந்திரத்தின் வரலாறு என்ன?

பிரிட்டனைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரன் என்பவர் தனது மனைவிக்கு பிறந்த நாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் பணம் எடுக்கச் சென்றார். வங்கியில் உள்‌ள கேஷ் கவுன்டரை நெருங்கிய போது, நேரம் முடிந்துவிட்டது என கேஷியர் கூறினார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஷெப்பர்ட், கையில் இருந்த காசுகளுடன் சாக்லெட் வெண்டிங் இயந்திரத்தை தேடிச் சென்று, தனது மனைவிக்கு சாக்லெட்டை வாங்கிக் கொடுத்தார். பணம் போட்டால் சாக்லெட் கிடைப்பது போல், எந்த நேரத்திலும் பணத்தை எடுக்க ஒரு இயந்திரம் இருந்தால் எப்படி இருக்கும் என அவர் சிந்தனையில் உருவானது தான் ஏ.டி.எம்.

உலகின் முதல் ஏடிஎம் லண்டனின் உள்ள என்பீல்டு என்ற இடத்தில் பார்க்கிளே வங்கி கிளையில், 1967ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அமைக்கப்பட்டது. நடிகர் ரெக் வார்னே என்பவர் தான் முதன்முதலில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்தார்‌. அப்போது அங்கு மக்கள் திரண்டு ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.

1967ல் அறிமுகம் செய்யப்பட்ட ஏடிஎம் மூன்றே ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பிரபலம் அடைந்தது. டெலிபோன் தொழில் நுட்பத்துடன் இணைத்து ஏடிஎம் இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்தன. வங்கிக்குச் சென்று பணம் எடுக்க விரும்பாதவர்கள் பெரும்பாலும் ஏடிஎம்களை பயன்படுத்தியதால் அதீத வளர்ச்சி அடைந்தது.

இந்தியாவில் 1987ஆம் ஆண்டு மும்பையில் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் 1999ல் தான் பல நகரங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்தன. அந்நேரத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவர் மூவாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தது. நாடெங்கும் 800 ஏடிஎம்கள் மட்டுமே பயன்பட்டு வந்த நிலையில், மிக குறுகிய காலத்தில் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்தது. ஏடிஎம் இயந்திரத்தின் தொடர்ச்சியாக டெபாசிட் மெஷின், பாஸ்புக் பிரிண்டிங் மெஷின் போன்ற பல இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன.

ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின் என்று கூறப்படும் ஏ.டி.எம் இயந்திரத்தின் பொன்விழாவை நினைவு கூறும் வகையில், கடந்த 2017ல், முதன் முதலாக அமைக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்திற்கு தங்கத் தகடு பொறுத்தப்பட்டதும், சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close