[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

வகுப்பறையில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் எலிசா ரோபோ 

elias-robot-helping-learn-to-kids-in-the-classroom-at-finland

மருத்துவம், தொழிற்துறைகளில் கால்பதித்துள்ள ரோபோ தொழில்நுட்பம் தற்போது குழந்தைகளுக்கு பாடம் நடத்தக் கூடிய ஆசிரியராக, கல்வித் துறையிலும் தனது பங்களிப்பை விரிவாக்கி உள்ளது. 

பின்லாந்து தொழில்நுட்பங்களி‌ன் அசுர வளர்ச்சியால் ரோபோக்களின் பயன்பாடும், உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு அதீத புத்திக்கூர்மையுடன் செயல்படுகின்றன. 

மனிதர்களால் செய்ய முடியாத சின்னச் சின்ன வேலைகளையும் மிக கச்சிதமாக அவை முடித்து வருகின்றன. இதன் காரணமாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களை பராமரிப்பதற்கும் ரோபோக்களின் துணையை மனிதர்கள் நாடத் தொடங்கி விட்டனர். அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக கல்வித் துறையிலும் ரோபோக்களின் ஆளுமை மெல்ல பரவித் தொடங்கிவிட்டது. இந்த வகை ரோபோக்களை பின்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து கல்வித்துறையில் புதுமையை புகுத்தியுள்ளனர்.

Image result for Robot educater Elisa finland

பின்லாந்தின் தென் பகுதியில் உள்ள டேம்பர் நகர தொடக்க பள்ளி ஒன்றில் ரோபோக்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன. “எலிசா” என்று பெயிரிடப்பட்ட ரோபோ, மொழி ஆசிரியராக பணியாற்றுகிறது. இந்த ரோபோவினால் 23 மொழிகளைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது இவை ஆங்கிலம், பின்னிஸ் மற்றும் ஜெர்மன் மொழிகளை மட்டுமே கற்றுத்தருகின்றன. பள்ளி குழந்தைகள் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் பதில்களை அளிக்கின்றன. 

Image result for Robot educater Elisa finland

1.9 அடி உயரம் கொண்ட இந்த எலிசா, குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் மனநிலைக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துகிறது. குழந்தைகள் சோர்வாகிவிட்டால் பாடம் சொல்லி தருவதை நிறுத்திவிட்டு அவர்களுக்கு புத்துணர்வு செய்ய பாட்டுப்பாடுவது, நடனமாடுவது மற்றும் நகைச்சுவைகளை சொல்லி உற்சாகப்படுவது போன்ற வேலைகளை நேர்த்தியாக செய்கிறது. 

இதில் எலிசா ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் நேவிகேஷன் சென்சார் மூலம் தானாகவே நகரும். இதற்காக சிறிய சக்கரம் பொருத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுடன் உரையாடும் இந்த ரோபோ, கதைகள் சொல்வது, லாஜிக்கல் கணக்குகளை விளக்குவது போன்ற பல வேலைகளை செய்கிறது. எலிசாவிடம் கல்வி கற்கும் குழந்தைகள் நேர்மறையான சிந்தனையுடனும், தெளிவான புரிதலுடனும் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close