[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

குறைந்த விலையில் இரண்டு வகையான கூகுள் ஸ்மார்ட்போன்கள்

the-mid-range-google-pixel-3a-and-pixel-3a-xl-were-announced

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஆகிய ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஐபோன், ஒன் பிளஸ் ஆகிய போன்களுக்கு போட்டியாக கடந்த 2016 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்திலும், பிற வசதிகளிலும் சிறந்த பிக்சல் ரக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது. இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்சல் மொபைல்களின் 3A மற்றும் 3A XL ‌ஆகிய வெர்ஷன்கள் தற்போது அறிமுகமாகியுள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றுவரும் கூகுள் IO 2019 டெவலப்பர் மாநாட்டில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்த ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தினார். இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூகுள் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 FYI இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. மேலும் 12எம்பி + 2எம்பி டூயல் பின்புற கேமரா மற்றும் 8எம்பி முன்புற கேமரா ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அத்தியாவசிய வசதிகளான, கைரேகை சென்சார், 3000எம்ஏஎச் பேட்டரி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கூகுள் 3A XL ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பிக்சல் 3A மொபைலில் உள்ள அனைத்து அம்சங்களும் XL ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளை, கருப்பு மட்டும் இல்லாமல் பிக்சல் 3A  மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்கள் புதிதாக பர்ப்பிள் நிற வேரியண்ட்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிக்சல் 3A ஸ்மார்ட்போன் 39 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், பிக்சல் 3A XL எக்ஸ்எல் போன் 44 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ‌வரும் 15 ஆம் தேதி இந்த போன்கள் விற்பனைக்கு வருகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close