[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பூமியை போன்று தண்ணீர் இருக்கும் சிறுகோள் : ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

water-found-in-samples-from-asteroid-itokawa

பூமியை போன்ற தோற்றமுடைய இட்டோகாபா  சிறு கோளில் தண்ணீர் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பூமியை போன்று ஒத்த வடிவம் கொண்ட இட்டோகாபா சிறுகோளை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2003ஆம் ஆண்டு ஜப்பானிய ஆய்வாளர்கள் ஹயபுசா என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு செலுத்தினர். இந்நிலையில் இட்டோகாவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆயிரத்து 800 அடி நீளமும், ஆயிரம் அடி அகலமும் கொண்ட இந்த சிறுகோள் சூரியனை சுற்றுவர 18 மாதங்களை எடுத்துக்கொள்கிறது. 

இந்த சிறு கோளில் பூமியில் உள்ளது போன்ற தனிம மாதிரிகள், வெப்பநிலை, நிலப்பரப்புகள், தாது பொருட்கள் போன்றவை இருப்பது ஹயபுசா முன்னதாக அனுப்பிய தகவல்கள் மூலம் தெரியவந்தது. தற்போது இட்டோகாபா சிறு கோளில் தண்ணீரும் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, மனித இனம் போன்று வேறு ஏதேனும் இனம் வாழ வாய்ப்புள்ளதாக எனவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close