[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

சீனாவுக்கு அடுத்து இந்தியா நிலவுக்கு அனுப்பவுள்ள "லேண்ட் ரோவர்" !

chandrayaan-2-spacecraft-will-have-13-payloads-rover-will-roll-out

இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது.
இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள
சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திராயன்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. அதன்பின்னர் இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திராயன்-II விண்கலத்தை அனுப்ப
திட்டமிட்டது. சந்திராயன்-II விண்கலம் வரும் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன்-II விண்கலத்தில் 3 முக்கிய தொழில்நுட்பங்கள் அனுப்பப்படவுள்ளன. அவை ஆர்பிடர்(Orbiter), லேண்ட் ரோவர்  ஆர்பிடர் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-IIIயின் மூலம் ஏவப்படும். லண்டரினுள் ரோவர் பொருத்தப்படவுள்ளது. சந்திராயன்-II பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். அதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது. 

நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை நிகழ்த்திய பெரிய சாதனை எனில் அது சந்திராயன் -1 திட்டம் என்று கூறலாம்.
நிலவின் வட்டப் பாதையில் சந்திராயன் -1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்திய போது உலகமே இந்தியாவைத் திரும்பிப்
பார்த்தது. மிகவும் குறைந்த செலவில், நிறைய அறிவியல் கணிப்புகளை வைத்து சந்திராயன் 1 செயல் திட்டம் வெற்றிகரமாக
முடிக்கப்பட்டது.இந்நிலையில் சந்திராயன், நிலவில் நீர்வழித் தடங்கள் தெரிவதாக கூறியது. இந்தக் கண்டுபிடிப்பு இதுவரை எந்த விண்வெளிஆராய்ச்சி நிறுவனங்களும் செய்யாதது ஆகும். அதன்பின் சில நாள்களில் இந்தியாவின் கண்டுபிடிப்பு உண்மைதான் என்றுஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்தது.

Image result for chandrayaan 2 land rover

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் -2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விண்கலம்
மட்டுமின்றி சிறிய அளவிலான ரோபோ போன்ற ரோவர் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த சந்திராயன் -2 ரோவர் நிலவின்
மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். இதற்கு முன் 2013- இல் கடைசியாக நிலவுக்கு சீனா இது
போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது.

Image result for chandrayaan 2 land rover

லேண்ட் ரோவர் என்றால் என்ன ?

சந்திராயன்  1 கருவிகள் மூலமாகக் கிடைத்த விவரங்களை ஆய்வு செய்வதற்காக, நிலவில்
இறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்ட் ரோவர் என்ற தானாக இயங்கும் கருவி அனுப்பப்பட உள்ளது. சுமார் 20 கிலோ எடை
கொண்ட இந்தக் கருவியில் 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவி சூரியசக்தி மூலம் இயங்கும் என்று
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.லேண்ட் ரோவர் கருவியை நிலவில் எந்த இடத்தில் இறங்கச் செய்வது என்று இப்போது
விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

எவ்வளவு எடை ?:

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் 3,290 கிலோ
எடை கொண்டதாக இருக்கும். இதில் ரஷ்யாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது.
மேலும், நவீன ரக முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்லாம், திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில் பூமியில்
இருந்து புறப்பட்ட 14-ஆவது நாளில், நிலவில் தனது பணியை சந்திராயன்- 2 தொடங்கும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close