[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

“வாட்ஸ்அப் மூலம் வெளிநாடுகளுக்கு பணப் பரிவர்த்தனை” - மார்க் அறிவிப்பு 

facebook-to-bring-more-changes-to-safeguard-user-data

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாடுகளை செய்யபோவதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனம் தன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் புதிய அப்டேட்களை கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து  ஃபேஸ்புக்கின் எஃப்-8 தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தரங்கில் உரையாற்றும் போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க் சில உறுதிமொழிகளை அறிவித்துள்ளார்.

அதில், “பயனாளர்களின் தகவல்களை காப்பதற்கு முன்னுரிமை அளிப்பதே நிறுவனத்தின் முதல் குறிக்கோள். பயனாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மிக முக்கிய மாற்றங்களை எங்கள் சமூக வலைத்தள செயலிகளி‌ல் கொண்டு‌வர உள்ளோம். அதன்படி மெசேஞ்சர் மூலம் செய்யப்படும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட இரு ‌‌பயனாளர்களுக்கு மட்டுமே தெரியும் வண்ணம் மேம்படுத்தப்படும்.

மேலும் அவ்வாறான தகவல்களை பேஸ்புக் நிறுவனத்தால் கூட பார்க்க இயலாத வகையில் மேம்படுத்தி, அதனை வாட்ஸ் அப் செயலியுடன் இணைக்கப்படும். இந்தி‌‌யாவிற்குள் மட்டும் ‌பரிமாறிக் கொள்ளும் வகையில் உள்ள வாட்ஸ் அப் பணப் பரிவர்த்தனை விரைவில் வெளிநாட்டு பரிவர்த்தனை‌களை மேற்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் எழுத்து வடிவிலான செய்திகளை போஸ்ட் செய்யவும் சில மேம்பாடுகளை அறிமுகப்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கருத்தரங்கின் போது ஃபேஸ்புக்கின் புதிய மாதிரிகளை மார்க் வெளியிட்டார். இந்தப் புதிய டிசைனில் குரூப் டேப் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஃபேஸ்புக் செயலியில் முதன்முதலாக வெளிவந்துள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் மெசேஞ்சரின் கணினிக்கான செயலியையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close