[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“வருடத்தை மாற்ற வேண்டாம்; உங்கள் கணக்கு முடங்கிவிடும்” - ட்விட்டர் எச்சரிக்கை    

twitter-prank-gets-people-to-change-birthday-to-2007-which-is-not-a-good-idea

புதிய ‘தீம்’ வேண்டுமென்று பிறந்த தேதியை மாற்றினீர்கள் என்றால் உங்கள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிடும் என்று ட்விட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் ட்விட்டரின் கலர், வடிவத்தை மாற்றும் வகையில் தீமை மாற்ற வேண்டுமென்றால் உங்கள் பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றுங்கள். அப்போது உங்கள் ட்விட்டர் கணக்கு புதிய வடிவத்தில் புதிய தீமாக (நிறம்) மாற்றப்பட்டுவிடும் என்ற செய்தி ட்விட்டரில் வைரலாகி பரவி வருகிறது. இதனைப் பார்த்து  பலரும் பிறந்ததேதியை மாற்ற அவர்களது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ட்விட்டர், ''பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றுங்கள் என்ற தகவலை அனைவரும் புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றினால் நீங்கள் சிறுவராக கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கு முடங்கிவிடும். அதற்காக யாரோ ஏற்படுத்திய சூழ்ச்சிதான் இது. இதில் யாரும் சிக்க வேண்டாம்'' என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருவேளை உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிறந்த ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாள அட்டையை  காண்பித்து ட்விட்டர் சப்போர்ட் உதவியுடன் கணக்கை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close