[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

இது புதுசு! ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு!

apple-announces-apple-credit-card

ஆப்பிள் நிறுவனம் கிரெடிட் கார்டு சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

புதுப்புது சிறப்பம்சங்கள், அப்டேட்டுகள், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் என ஆப்பிள் நிறுவன பொருட்கள் என்றும் முன்மாதிரியாகவே திகழ்கிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டிம் குக் புதிய வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார்

ஆப்பிளின் புதிய வசதி அறிமுகங்களில் கிரெடிட் கார்டு சேவை கவனம் பெற்றது. ஆப்பிள் கார்டு என அழைக்கப்படும் இந்த‌ புதிய கிரெடிட் கார்டினை 'ஆப்பிள் பே' பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம். பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் கார்டு கொண்டு பயனர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினார்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது. 

மேலும் இந்த ஆப்பிள் கார்டில் கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி எண் உள்ளிட்ட எதுவும் இடம்பெற்றிருக்காது. இத்தகைய தகவல்கள் அனைத்தும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும். இதுதவிர ஆப்பிள் கார்டு‌ மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதுமட்டுமின்றி கிரெடிட் கார்ட் கட்டணத்தை தாமதாக செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது ஆப்பிள் கிரெடிட் கார்டின் கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சேவை தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் இந்த வசதி கொண்டுவரப்படவில்லை. விரைவில் இந்திய பயனாளர்களும் இந்த வசதியை பெறலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close