[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

எத்தனை முறை பார்வேர்ட் செய்கிறோம் ? வாட்ஸ்அப்பில் புதிய வசதி

whatsapp-forwarding-info-frequently-forwarded-label-spotted

எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் புதிய முறை, வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் அறிமுகமாகி உள்ளது. 

வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது.  பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது. இந்நிலையில்  எத்தனை முறை ஒரு குறுஞ்செய்தி பார்வேர்ட் (forward) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் புதிய முறை வாட்ஸ் அப் சோதனை முறையில் அறிமுகமாகி உள்ளது. 

வாட்ஸ் அப்பின் சோதனை ஓட்ட பதிவு எனப்படும் பீட்டா வெர்சனில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பார்வேர்ட் செய்யும் குறுஞ்செய்தியை கிளிக் செய்து 'i' என்ற பொத்தானை அழுத்தினால் எத்தனை முறை அந்த குறுஞ்செய்தி பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் காட்டப்படுகிறது. 

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளாக இருந்தால் , "அடிக்கடி பார்வேர்ட் செய்யப்படுகிறது" (Frequently Forwarded) என்ற தகவலும் இணைத்து காட்டப்படுகிறது. தவறான மற்றும் போலி செய்திகளை குறைக்க இந்த புதிய வசதியை அமல்படுத்தி உள்‌ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close