[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுடன் சுனில் அரோரா ஆலோசனை

facebook-twitter-tiktok-to-come-up-with-code-to-prevent-misuse-of-social-media-during-polls

சமூக வலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சிறிய மன்றங்கள் முதல் பெரிய தேசிய கட்சிகள் வரை சமூக வலைதளங்களை பெரிய சக்தியாக நினைக்கின்றன. தேர்தல் பிரச்சார வகைகளில் சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் என்பதும் சேர்ந்துவிட்டது. சமூக வலைதளங்களுக்கென தனி பிரிவு உருவாக்கப்பட்டு பல கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன. 5% வாக்குகளை சமூக வலைதளங்கள் தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆதாயத்திற்காக சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதை தேர்தல் ஆணையம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என தெரிவிக்கப்பட்டது. குறைகளை தெரிவிக்க சமூக வலைதளங்கள் தனி அமைப்பை ஏற்படுத்துவது, கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட விளம்பர வருவாயை தெரிவிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ள நாடாளுமன்றக் குழு, மத்திய அமைச்சகங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் ஆலோசித்து சில வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்படும், அதனை சமூக வலைதள நிறுவனங்கள்  பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close