[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

இணைய உலகில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன?

what-happens-in-an-internet-minute-in-2019

நேற்று இரவு முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப் ஆகிய செயலிகள் பல பயனாளர்களுக்கு முடங்கியது. சிலருக்கு முழுவதுமாக முடங்கவில்லை என்றாலும் பல கோளாறுகளுக்கு உள்ளானது. அதிர்ச்சியடைந்த இணையவாசிகள் ட்விட்டர் பக்கம் குவிந்தனர். ஃபேஸ்புக் முடக்கம் குறித்து கிண்டலும், கேலியுமாய் பதிவுகள் பறந்தன. பரபரப்பான ஃபேஸ்புக் நிறுவனம், பாதிக்கப்பட்ட சேவையை சீரமைக்க மு‌யற்சிகள் மேற்கொள்வதாக ட்விட்டரில் தெரிவித்தது. இந்த பிரச்னை இன்று காலையில் தான் சரியானது. 

ஃபேஸ்புக்கும், இன்ஸ்டாவும் ஒரு இரவு அரைகுறையாக முடங்கியதற்கே இணையவாசிகள் பரிதவித்துப்போய்விட்டார்கள். நாம் நினைப்பது போல் அல்லாமல் இணைய உலகம் மிகபெரிய அளவில் இயங்கி வருகிறது. நாம் சாதாரணமாக கடந்துவிடும் ஒரு நிமிடம் அதாவது 60 நொடிகள் என்பது இணைய உலகத்தில் என்னென்ன வேலைகளை கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமடைந்து போவீர்கள். இது குறித்து அமெரிக்காவின் தனியார் அமைப்பு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2019-ம் ஆண்டில் இணையத்தில் 1 நிமிடத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை காணலாம்...

கூகுள்:
உலகின் தலைசிறந்த தேடுபொறியான கூகுளில் ஒரு நிமிடத்தில் 38 லட்சம் தேடல்களை மக்கள் தேடுகிறார்கள்.

ஃபேஸ்புக்:
சமூக வலைதளத்தின் முன்னணி நிறுவனமான ஃபேஸ்புக்கில் 10 லட்சம் பேர் தனது அக்கவுண்டை லாக்கின் செய்கிறார்கள்

மெசேன்ஜர்:
ஃபேஸ்புக் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெசேன்ஜர் மூலமாக 4 கோடிக்கும் அதிகமான ஃமெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன.

ட்விட்டர்:
ஒரு நிமிடத்தில் 87500 ட்விட்கள் செய்யப்படுகின்றன

யூ டியூப்:
வீடியோ தளமான யூ டியூப்பில் 45 லட்சம் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன

ஆப் ஸ்டோர்:
ஆண்ட்ராய்ட் ஆப்களின் தரவிறக்க செயலியான கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமும் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலமும்  3 லட்சத்து 90 ஆயிரத்து 30 செயலிகள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன

இன்ஸ்டாகிராம்: 
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 222 விரல்கள் ஸ்குரோல் செய்கின்றன.

நெட்பிளிக்ஸ்:
நெட்பிளிக்சில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 444 மணி நேரத்திற்கான வீடியோ பார்க்கப்படுகிறது.

இமெயில்:
ஒரு நிமிடத்தில் 18 லட்சம் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.

ஆன்லைன் ஷாப்பிங்:
ஒரு நிமிடத்தில் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கான வியபாரம் ஆன்லைனில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் இணையத்தின் பயனாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close