[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

பார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ

robot-that-draws-drawings-found-by-british-scientist

பிரட்டன் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ள AI-DA ரோபோ, பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறது. 

ரோபோக்களின் ஆதிக்கம் இன்று அனைத்து துறைகளிலும் மேலோங்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களுக்கான அத்தனை திறன்களையும் தன் வசம் கொண்டுள்ளது. 

மேலும் அவை மனிதர்களைவிட ஒரு மடங்கு ஸ்மார்ட்டாக பணியாற்றுகின்றன. தானாக சிந்தித்து மனிதர்களின் கட்டளைகளை உள்வாங்கிக்கொண்டு செயல்படும் இந்த ரோபோக்கள் ரசிக்கும்படியாகவும் அதிக திறன் கொண்டதாகவு‌ம் இருக்கின்றன.

பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஐடான் மெல்லர் AI-DA என்ற ரோபோவை உருவாக்கியுள்ளார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ ஓவிய கலைஞர்களுக்கு நிக‌ராக தத்ரூபமாக வரையக்கூடிய திறனை பெற்றுள்ளது. திறமையில் மட்டுமல்ல‌‌; மனிதர்களை போல் கண்ணை இமைக்கும் திறன் கொண்டதாகவும், முகம், கழுத்து மற்றும் தோள்பட்டை, இடுப்பு, கை ஆகியவற்றை விருப்பத்திற்கு ஏற்ப அசைக்கும் தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இது பார்க்கும் பொருட்களை உள்வாங்கிக்கொண்டு நிஜத்தை போலவே வரையும் அசாத்திய திறமையை பெற்றுள்ளது. உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கொண்ட முதல் ஓவிய ரோபோவுடன் ஒரு பிரஷ் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோவிற்கான கட்டளைகளை தனது மொபைல் போன் மூலம் ஓவியர் பர்னாபி வழங்குகிறார். தனக்கான கட்டளைகளை கம்ப்யூட்டர் மூலமாக பெறும் ரோபோ மாடர்ன் ஓவியங்களை வரைந்து தள்ளுகிறது.

இயந்திர வடிவில் ஓவியக் கலைஞராக இல்லாது மனித வடிவில் ஓவியனாகவே உருவெடுத்துள்ள இந்த ரோபோ வரும் மே மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ரோபோ வரையும் ஓவியங்கள் நவம்பர் மாதம் லண்டனில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close