[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

புயலில் சிக்கி விண்கலம் செயலிழந்துவிட்டது - நாசா

nasa-making-one-more-attempt-to-contact-opportunity-mars-rover

செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ரோவர் தற்போது முழுமையாக செயலிழந்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறு உள்ளனவா? என்பது குறித்து கண்டறிய Opportunity என்ற ரோவரை டெல்டா - 2 ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. செவ்வாயில் முதன்முதலில் தடம் பதித்த இந்த ரோவர், லேசர் மூலம் செவ்வாயிலுள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்தது. மேலும் கடந்த 15 ஆண்டுகளாக  Opportunity ரோவர் சிறப்பாக செயல்பட்டு பல புகைப்படங்களை அனுப்பி வந்தது. 

இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் இந்த ரோவர் காணாமல் போனது. செவ்வாய் கிரகத்தில் வீசிய புயலில் சிக்கிய அந்த விண்கலம், புயலுக்கு பிறகு காணாமல் போனது. அந்த விண்கலம் எங்குள்ளது என்ற விவரம் தெரியாமல் நாசா விஞ்ஞானிகள் குழப்பத்தில் மூழ்கினர். ஆனால் புயலின் வேகம் குறைந்து சராசரி நிலையை எட்டிய போது  ரோவர் விண்கலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் Opportunity ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும், அதனுடனான சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close