[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

4.19 லட்சத்துக்கு புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் அறிமுகம்

2019-maruti-suzuki-wagon-r-launched-in-india-priced-at-rs-4-19-lakh

மூன்றாம் தலைமுறை மாருதி சுசூகி வேகன் ஆர்-ன் 2019 ஆண்டு கார்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த கார்கள் புதிய வடிவமைப்புகளுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் ஏற்கனவே உள்ள 1 லிட்டர் யூனிட்களுடன் வெளியாகியுள்ளது.

புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் கார்களின் விலை 4.49 லட்ச ரூபாயில் துவங்கி, 5.69 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (டெல்லி எக்ஸ் ஷோ ரூம் விலை).

இந்த காரின் முன் புறத்தில் மறுமுறை வடிவமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த கார்கள் தற்போது ஹார்ட்டேக் பிளாட்பார்மில் உருவாகப்பட்டுள்ளது. இந்தப் புதிய கார் பலீனோ, எர்ட்டிகா, மற்றும் ஸ்விப்ட் கார்களை விட பெரியளவில் இருப்பதால் அதிக இடம் வசதிகள் உள்ளது.

புதிய 2019 வேகன் ஆர் கார்கள் 35mm அதிக நீளம் கொண்ட வீல்பேஸ்களுடன் 2,435mm-ஆக இருக்கும். இதனால், இதில் அதிக இடம் வசதி மற்றும் கேபின் வசதிகள் இருக்கும். 

பாதுகாப்பு வசதிகளாக டிரைவர் ஏர்பேக்ஸ், முன்புற சீட் பெல்ட் ரீமைண்டர், ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் ரியர் பார்கிங் சென்சார்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் கார்கள் டாடா டிகோ மற்றும் டாட்சன் கோ, மாருதி சுசூகி செலிரியோ, ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close