[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காமல் போன போன்கள்  

whatsapp-will-stop-working-on-nokia-s40-older-android-and-iphone-models-to-lose-support-in-2020

இன்று முதல் சில குறிப்பிட்ட வகை போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. பயனாளர்களை கவர நாளுக்கு நாள் வாட்ஸ் அப் தன்னை அப்டேட் செய்து கொள்கிறது. செயலி அப்டேட் ஆகும்போது அதை தாங்கும் அளவுக்கு செல்போனின் திறனும் இருக்க வேண்டும். அதனால் ஆரம்ப காலங்களில் கொடுக்கப்பட்ட குறைந்த அளவு திறன் கொண்ட செல்போன்களில் இருந்து அவ்வப்போது தனது சேவையை நிறுத்திக்கொள்கிறது வாட்ஸ் அப். அதன்படி இன்று முதல் சில குறிப்பிட்ட வகை போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதன்படி  பிளாக்பெரி 10, பிளாக்பெரி ஓ.எஸ், நோக்கியா சிம்பியன் எஸ் 60, வின்டோஸ் 8.0, நோக்கியா எஸ் 40, ஆண்டிராய்டு வெர்ஷன் 2,3,7 மற்றும் பழைய ஐ போன் ஐ.ஓ.எஸ் 7 வகை மாடல்களிலும் வாட்ஸ் ஆப் இயங்காது. குறிப்பாக நோக்கியா எஸ் 40 OS ஐ சேர்ந்த நோக்கியா ஆஷா 201, நோக்கியா ஆஷா 205, நோக்கியா ஆஷா 210, நோக்கியா ஆஷா 230, நோக்கியா ஆஷா 500, நோக்கியா ஆஷா 501, நோக்கியா ஆஷா 502, நோக்கியா ஆஷா 503, நோக்கியா 206, நோக்கியா 208, நோக்கியா 301, நோக்கியா 515 ஆகிய போன்கள் இந்தப் பட்டியலில் அடங்கும். 

இந்த வகை போன்களில் வாட்ஸ் அப் 2018 ஜூன் வரை மட்டுமே இயங்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அதனை டிசம்பர் வரை நீட்டிப்பு செய்தது வாட்ஸ் அப் நிறுவனம்.

மேலும் ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் அதற்கும் பழைய ஜிஞ்சர்பிரட் வகையிலான போன்களிலும், ஐ போன் 3GS/ iOS போன்களிலும் 2020 பிப்ரவரி 1 முதல் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close