[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

நோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு

nokia-8-1-india-launch-teased-ahead-of-december-5-unveiling

நோக்கியா நிறுவனத்தின் 8.1 மாடல் ஸ்மாட்ர்போன் இந்தியாவில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் போன்களுக்குப் பிறகு நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய மாடலான 8.1 ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.18 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்குதளத்துடன், இரட்டைக் கேமரா வசதியுடனும் வெளிவருகிறது. முன்புறத்தில் 20 எம்பி (மெகா பிக்ஸல்) செல்ஃபி கேமராவும், பின்புறத்தில் 12 எம்பி மற்றும் 13 எம்பி என இரட்டைக் கேமராவும் உள்ளது. ஆக்டா-கோர் பிராசஸிரில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், 3500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு ரகத்திலும் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close