[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

இன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட் 29 செயற்கைக்கோள்

isro-to-launch-communication-satellite-today

ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக கவுன்ட் டவுன் தொடங்கியது. வானிலை மாற்றத்தை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிசாட் 29 செயற்கைகோள், மார்க்-3 டி2 ராக்கெட் மூலம் இன்று விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

இச்செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை ஐந்து மணி 8 நிமிடத்துக்கு விண்ணுக்கு செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி 38 நிமிட கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் 2 மணி 50 நிமிடத்திற்கு தொடங்கியது.

கடல்சார் ஆராய்ச்சி, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. 3,423 கிலோ எடை கொண்ட ஜிசாட் 29 செயற்கைகோளில் அதிநவீன சக்தி கொண்ட டரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஜிசாட் 29 செயற்கைகோளை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close