[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

டிக்டாக்குக்கு போட்டியாக பேஸ்புக் அறிமுகம் செய்த புதிய ஆப்!

facebook-quietly-launches-a-tiktok-competitor-app-called-lasso

டிக்டாக் செயலிக்கு போட்டியா‌க பேஸ்புக் நிறுவனம் 'லஸ்சோ' என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.‌

சமூக வலைதளங்களில் ராஜாவாக திகழ்ந்து வருவது பேஸ்புக். பேஸ்புக்கிற்கு போட்டியாக எத்தனையோ செயலிகள் களம் இறங்கி காணாமல் போய்விட்டன. மறுபக்கத்தில் வாட்ஸ் அப் வேகமாக வளர அந்த செயலியையும் தன்வசமாக்கியது பேஸ்புக் நிறுவனம். மேற்கொண்டு இருக்கும் இன்ஸ்டாகிராமும் பேஸ்புக் குடும்பம் தான். சமூகவலைதளங்களில் பேஸ்புக் குடும்பத்தை கடக்காமல் நம்மால் நாட்களை கடத்த முடியாது. 

இந்நிலையில் சமூகவலைதள வாசிகளின் தற்போதைய கவனம் ’டிக் டாக்’. இந்த செயலிகளுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் போட்டி செயலியும் எதுவும் இல்லை. இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் டிக்டாக் செயலியில் வீடியோக்களை லிப் சிங்க் செய்து பாடலுக்கு ஏற்ப நடித்து, நடனமாடி அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது டிக் டாக் செயலி மீது பேஸ்புக் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் ’லஸ்சோ’ செயலியை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது.

'லஸ்சொ' என்பதற்கு சுருக்குடன் கூடிய கயிறு என்பது பொருளாகும். டிக்டாக் செயலியில் மூழ்கி இருக்கும் இளைஞர்களை தன் வசம் இழுக்கும் பொருட்டு 'லஸ்சோ' என்ற செயலியை வடிவமைத்ததாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. லஸ்சோவை பேஸ்புக், அல்லது இன்ஸ்டா செயலியில் இருந்தே லாக்கின் செய்யலாம் என்றும் அதில் வரும் வீடியோக்களுக்கு நம் அசைவுகளை பொருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாம் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக பேஸ்புக் ஸ்டோரியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கிறது பேஸ்புக். இன்ஸ்டாவில் நேரடி ஸ்டோரியாக பயன்படுத்த விரைவில் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் பேஸ்புக்கின் தயாரிப்பு மேலாளர் இந்த செயலியை அறிமுகம் செய்து, அதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close