[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..

facebook-introduces-rules-to-open-profile-and-pages

போலி ஐ.டி.க்களின் தொல்லை, போலி செய்திகள், வதந்திகள் என சமூக வலைத்தளங்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதற்கிடையில் தகவல்களை திருடி, தேர்தல் முடிவையே நிர்ணயிக்கும் ஆட்கள் ஒருபக்கம். இதெல்லாம், பேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தன. கொஞ்சம் உஷாரான ட்விட்டர், கும்பல் கும்பலாக பேக் ஐடிக்களை காலி செய்தது. ஆனால் பேஸ்புக் கொஞ்சம் லேட். 

Read Also -> திரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி பிரத்யேக பேட்டி

ஒருவழியாக சுதாரித்த பேஸ்புக், தற்போது அக்கவுண்ட் ஓபன் செய்யவே அதிரடி விதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. ஆனாலும் பல லட்சம் அக்கவுண்ட் தகவல்களை களாவாடிச் சென்று விட்டார்கள். அப்படி என்ன புது ரூல்ஸ் என யோசிக்கிறீர்களா ? ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் புதிதாக கணக்கோ, பக்கமோ ஆரம்பிக்க நினைத்தால் தொல்லை. முன்பு போல் எளிதாக இருந்த அனைத்தையும் காலி செய்து, ரூல்ஸ் மேல் ரூல்ஸ் போட்டு கடுப்படிக்கிறது பேஸ்புக். 

Read Also -> நடிகர் மோகன்லாலை குற்றம் சொல்வதா? நடிகைகளுக்கு ’அம்மா’ பதில்!  

குறிப்பாக பேஸ்புக் கணக்கு தொடங்க நமக்கு ஒரு மெயில் ஐ.டி அவசியம். இது ஆரம்பம் முதலே இருக்கும் ரூல்ஸ். ஆனால் புரொபைல் பிக்சரையும் கட்டாயமாக்கியிருக்கிறது பேஸ்புக். புரொபைல் பிக்சரை அப்லோட் செய்தால் மட்டுமே கணக்கு திறக்க முடியும். அப்படியே அப்லோட் செய்தாலும் கூட, அந்த புகைப்படம் ஒரிஜினலா, பேஸ்புக்கில் ஏற்கனவே இருக்கிறதா என்றெல்லாம் ஸ்கேன் செய்து, அப்ரூவல் கொடுக்கிறார்கள். அப்ரூவல் வந்த பிறகே நம்மால் கணக்கு தொடங்கி செயல்பட முடியும். பிறகு பயன்பாட்டில் உள்ள ,மெயில் ஐடி, மொபைல் எண் போன்றவையும் கொடுக்க சொல்லி, படுத்தி விடுகிறார்கள்

Read Also -> “இதெல்லாம் சகஜம்.. பட்டும் படமா நடக்கணும்”- வைரமுத்து மீது குவியும் பாலியல் புகார்கள்..! 

இது ஒருபுறம் இருக்க, பேஸ்புக் பேஜ் ஆரம்பிப்பதும் முன்போல சுலபம் இல்லை. ஒருவர் எத்தனை பேஸ்புக் பேஜ் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்பது பேஸ்புக் கொடுத்த வசதி. அதை வைத்து நாமும் நிறைய பக்கங்களை சும்மா இருக்கட்டுமே என ஆரம்பித்து வைத்திருப்போம். ஆனால் எந்த போஸ்ட்டும் இல்லாவிட்டால் இரண்டு மெயில்களை அனுப்பிவிட்டு , டீ.ஆக்டிவேட் செய்துவிடுகிறார்கள்.

Read Also -> யார் இந்த சின்மயி ?

இதோடு எந்த இரு பயனாளரும் தற்போது கூடுதலாக ஒரு பேஜ் மட்டுமே ஆரம்பிக்க பேஸ்புக் அனுமதிக்கிறது. அதையும் தாண்டி ஆரம்பிக்க வேண்டுமானால், UserName இல்லாமல் மட்டுமே ஆரம்பிக்க முடியும். UserName வேண்டாமென்றால் ஆரம்பித்துக் கொள்ளலாம், ஆனால் அது அதிகாரப்பூர்வ ஒன்றாக இருக்காது. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close