[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

சாம்சங் கேலக்ஸி ‘ஏ7 (2018)’ : பின்புறம் 3 கேமரா, 24எம்பி செல்ஃபி

samsung-galaxy-a7-2018-with-triple-camera-setup-launched-in-india

தென்கொரிய நிறுவனமான சாம்சங், தங்கள் புதிய ஸ்மார்ட்போனான சாம்சங் ‘கேலக்ஸி ஏ7’ மாடலை வரும் வியாழக்கிழமை இந்தியாவில் வெளியிடுகிறது.

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு ‘கேலக்ஸி ஏ7’ (2017) என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. தற்போது அதே மாடலை புதுப்பித்து ‘கேலக்ஸி ஏ7’ என வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் சொந்த நாடான தென்கொரியாவில் முதலில் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து மற்ற நாடுகளில் வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் வியாழக்கிழமை முதல் விற்பனைக்கு வருகிறது. வியாழக்கிழமை அன்று ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிலிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் இதனை வாங்கலாம். வெள்ளிக்கிழமை முதல் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது. 

இந்த போனின் பின்புறத்தில் 24 எம்பி, 8 எம்பி மற்றும் 5 எம்பி என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் 24 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. மெமரியை பொறுத்தவரையில் இரண்டு ரகங்களில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் மெமரியுடன் வெளிவரும் ரகத்திற்கு ரூ.23,990 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் மெமரியுடன் வரும் ரகம் ரூ.28,990க்கு விற்பனையாகவுள்ளது. இதில் 3,300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close