சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பட்ட வாயு கசிவால், பிராண வாயு வெளியேறியது. உடனடியாக அதை கண்டறிந்து வீரர்கள் சரி செய்ததால், மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விண்வெளியில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து அமைத்துள்ளன. இங்கு ஆறு விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று அவர்கள் உறங்கி கொண்டிருந்தபோது திடீரென காற்றழுத்தம் குறைவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விண்வெளி நிலையத்தை சிறிய அளவிலான எரிகல் ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் 2 மில்லிமீட்டர் அளவிற்கு ஓட்டை ஏற்பட்டதில் பிராண வாயு கசிந்தது.
இதையறிந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்ஸ்சாண்டர் ஹெர்ஸ்ட் தனது கைவிரலை கொண்டு ஓட்டையை அடைத் துள்ளார். அதன்பின் ஒட்டுநாடாவை கொண்டு துளையை அடைத்தார். இதனால் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்த வீரர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்.
விண்வெளி மையத்தில் உள்ள ஆறு பேருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று ஹஸ்டன், டெக்சாஸ் மற்றும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
இன்று உலக தாய்மொழி தினம் ! இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன ?
"தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம், ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும்" தஷ்வந்தின் தந்தை
200 அடி குழிக்குள் விழுந்த 6 வயது குழந்தை: மீட்பு பணி தீவிரம்
“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்