[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

பெரும்பாலான இடங்களில் தீ: இந்தியாவுக்கு நாசா எச்சரிக்கை!

alarming-nasa-images-show-massive-fires-in-large-parts-of-india

இந்தியாவில் கடந்த 10 நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் தீ பிடித்துள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நாசா அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி மையமான நாசா, சமீபத்தில் இந்தியாவை சேட்டிலைட் மூலம் படம் படித்து வந்துள்ளது. அதன்படி, கடந்த 10 நாட்களாக பிடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா, எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் சிவப்பு புள்ளிகளாக தீ பற்றி எரிவது தெரிகிறது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, சட்டீஸ்கர் மற்றும் சில தென்னிந்திய பகுதிகளில் இந்த தீ பற்றி எரிகிறது.

ஏற்கனவே கடுமையான வெயில் தாக்கத்தில் இருக்கும் இந்தியா, இந்த தீயின் தாக்கத்தால் மேலும் தீவிர வெப்பமாகும் என்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதில் சில பகுதிகளில் தெரிவது, காட்டூத் தீயாக இருக்கலாம் என்றும் விளை நிலங்களில் எரியும் தீயாகவும் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வயல்வெளிகளில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மட்டும் நாடு முழுவதிலும் 14% அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதாகவும், இது இயற்கை பேரிடருக்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயினால் ஏற்படும் புகையால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள் ளதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் வட  மாநிலங்களில், விவசாயிகளே நிலத்திற்கு தீ வைக்கும் சம்பவங் கள் நடக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் விளை நிலங்களில் தீ வைத்த 10 விவசாயிகள் இந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அம்மாநில விவசாய அமைச்சர் பால்கிருஷ்ணா படிடார் கூறும்போது, ‘விளைநிலங்களில் தீ வைப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகளிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close