[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

இஸ்ரோவின் 'நேவிக்' சாட்டிலைட் ! ஏப்.12 ஆம் தேதி விண்ணுக்கு செல்கிறது

isro-to-launch-navigation-satellite-irnss-1i-in-early-hours-of-april-12

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏப்ரல் 12 ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஐ என்கின்ற வழிக்காட்டி செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்படவுள்ளது. இந்தச் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் மூலம் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 4.04 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு இறுகிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவுக்கென பிரத்யேக நேவிகேஷன் சிஸ்டத்தை உருவாக்குவதற்காக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது இஸ்ரோ. இதன் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1ஐ செயற்கைக்கோள், 9 ஆவது செயற்கைக்கோளாகும். இந்தச் செயற்கைக்கோள் ஏற்கெனவே விண்ணுக்கு அனுப்பி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1ஏ செயற்கைக்கோளின் "ருபிடியிம் ஆட்டோமேட்டிக் கிளாக்" நின்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எனவே, அதற்கான மாற்றுச் செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஐ செயற்கைக்கோள் அனுப்பப்படுவுதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 
இஸ்ரோ அண்மையில் ஜிஎஸ்எல்வி எஃப் 08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6 ஏ  செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆனால், 48 மணி நேரம் கழித்து புவி வட்டப் பாதையின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செயற்கைக்கோள் முயன்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை தொடர்புக் கொள்ள இரவுப் பகலாக வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close