[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

ஹெல்லோ... நிலாவில் இருந்துதான் பேசுறேன் ! விரைவில் நிலவில் செல்போன் டவர்

mobile-phone-network-on-moon-planned-for-2018-to-connect-2-rovers-and-base

அறிவியல் வரலாற்றில் முதல்முறையாக நிலாவில் மொபைல் நெட்வார்க் வசதி ஏற்படுத்தப்ட உள்ளது.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதுவும் மொபைல் தொலைத்தொடர்புத் துறையில் அசூர வளர்ச்சி. கடந்த 10 வருடங்களில் பட்டி தொட்டி எங்கும் செல்போன்கள் ஆதிக்கம் இருக்கு. அதிலும் 2ஜி, 3ஜி, 4ஜி வந்தாச்சு.. இனி அடுத்தது என்ன என யோசிக்கிறீங்களா...? அறிவியல் வரலாற்றில் முதல்முறையாக நிலாவில் மொபைல் நெட்வார்க் வசதி விரைவில் அமைய உள்ளது.

வோடபோன், நோக்கியா, ஆடி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக,  நிலவின் மேற்பரப்பை பூமியில் இருப்பவர்கள் கண்டுகளிக்க வசதியாக அதனை உயர்தர பிக்சலில் லைவ்வாகவும் காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக  விண்வெளி திட்டங்களையெல்லாம் இதுவரை அரசுத் துறை சேர்ந்த துறைகளே செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது முதல்முறையாக தனியார் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஒருகிலோவுக்கும் குறைவான எடையில் ஹார்டுவேர் ஒன்றை நோக்கியா நிறுவனம் தயாரித்துத் தரவுள்ளது.

பெர்லினை சேர்ந்த பிடி அறிவியலாளர்கள் குழுவுடன் இணைந்து இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. 2019ல் ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் திட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் வோடபோன் கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close