[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

ஒரு வருடத்திற்கு செட் ஆப் பாக்ஸ் இலவசம்: ரிலையன்ஸ் அதிரடி

reliance-set-up-box-free-for-one-year

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்ததும் மற்ற தனியார் தொலைத் தொடர்புதுறை நிறுவனங்கள் வியாபார ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ளன. 4ஜி சேவையுடன் இலவச அழைப்புகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தவுடன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள்  ஜியோவை தேர்ந்தெடுக்க நேர்ந்தது. ஆகவே மற்ற நிறுவனங்கள் தோல்வியை சந்தித்தன. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ்  நிறுவனம் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை தொடங்கியுள்ளது. டிவி நேயர்களை குறிவைக்க தொடங்கியுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் முத்திரை பதித்துவிட்ட நிலையில் தற்போது கேபிள் செட் ஆப் பாக்ஸ் விற்பனையில் இறங்கியுள்ளது. அனைவரும் கட்டாயம் செட் ஆப் பாக்ஸ் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இலவச செட் ஆப் பாக்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசம் என்ற அதிரடி ஆஃபருடன் களத்தில் ரிலைன்ஸ் இறங்கியுள்ளது.

இதனால் மற்ற செட் ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. ஒரு வருடத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட செட் ஆப் பாக்ஸ் என்ற அறிவிப்பு மட்டுமின்றி அனைத்து சேனல்கள், ஹெச்டி சேனல்கள் உட்பட இலவசம் என அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு பின்னரும் ஃப்ரீ டு ஏர் (FDA) என்ற வகையில் 500 சேனல்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close