[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

1050சிசி-ல் பறக்கும்.. ட்ரையம்ப் ட்ரிபுள் எஸ்: விலை ரூ.12.17 லட்சம் தான்!

2018-triumph-speed-triple-s-and-rs-revealed

ட்ரையம்ப் பைக் நிறுவனம் 2018 மாடல் ட்ரிபுள் எஸ் பைக்கை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல பைக் நிறுவனம் ட்ரையம்ப். 1983ஆம் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டம் முதலே தரமான மற்றும் விலையுயர்ந்த பைக்குகளை வெளியீடு செய்து வருகிறது. ராயல் லுக் அளிக்கும் இந்த பைக்குகள் சாமானியர்களுக்கு சற்று கனவாகவுள்ளது என்று கூறலாம். ஏனெனில் இந்த பைக்குகளின் விலை அப்படி.

தற்போது 2018ஆம் ஆண்டின் ட்ரையம்ப் ட்ரிபுள் எஸ் பைக் வெளியிடப்பட்டுள்ளது. 1050 சிசி இன்ஜியன் பவருடன் வெளிவந்துள்ள இந்த பைக்கின் விலை ரூ.12.17 லட்சம் ஆகும்.

இதன் பெட்ரோல் டேங்க் 17.5 லிட்டர் பிடிக்கும். குறைந்த பட்சம் 2 லிட்டர் பெட்ரோல் இருந்தால் தான் இந்த பைக் ஸ்டார்ட் ஆகும். ஒரு லிட்டருக்கு 17 கிலோ மீட்டரே மைலேஜ் கொடுக்கும் இதில், சுமார் 300 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். செல்ஃப் ஸ்டார்ட் வசதியுடன் 6 கீர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் எடை 186 கிலோ ஆகும். டிஜிட்டல் ஸ்பீட் மீட்டருடன், அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிகப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் இது வெளிவந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close