[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

அட்டகாசம் செய்யும் முதல் குளோனிங் குரங்கு: வீடியோ

monkeys-cloned-in-world-first-scientists-reveal

உலகிலேயே முதன்முறையாக குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சோமாடிக் செல் அணுசக்தி பரிமாற்றம் என்னும் குளோனிங் முறையில் 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மரி ஆடு பிறந்தது. செல்லில் உள்ள உட்கருவை, டிஎன்ஏ-வுடன் சேர்த்து, கரு நீக்கப்பட்ட முட்டையில் பொருத்துவதன் மூலம் புது உயிரினத்தை உருவாக்குவதே சோமாடிக் முறையாகும். இந்தத் நுட்பத்தை பயன்படுத்தி பிரைமேட் வகை உயிரினத்தை முதல் முறையாக உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். இந்தத் தொழில்நுட்பம் மூலம் செம்மரி ஆடு மட்டுமின்றி பசுக்கள், பன்றிகள், நாய்கள், முயல்கள், எலிகள் என 20க்கும் அதிகமான உயிரினங்களை உருவாக்கி சாதனை படைத்தனர்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை ஷாங்காயில் உள்ள சீன அகாடமி ஆஃப் சைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோசீனஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 79 முறை தோல்வியடைந்து, கடைசியில் 127 முட்டைகளில் இருந்து 2 குரங்குகளை உருவாக்கியுள்ளனர். 

குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்குவது சாத்தியம் என்பதால் மனித குழந்தைகளையும் உருவாக்குவது விரைவில் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகளை குளோனிங் முறையில் உருவாக்குவது நிறைய பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், மரபணு ஒத்த குரங்குகள் மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளை எளிதாக்க உதவும் என்கின்றனர். மனித குளோனிங் செய்வது எங்களது நோக்கமில்லை எனவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் இன்னும் பல குரங்குகளை உருவாக்கவும் சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close