[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூச்சுத்திணறல் காரணமாக பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!
  • BREAKING-NEWS ஆட்சி அமைக்க ஆதரவு? - உத்தவ் தாக்கரே உடன் சோனியா காந்தி தொலைபேசி உரையாடல்
  • BREAKING-NEWS சிவசேனா ஆட்சியமைத்தால் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு எனத் தகவல்
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு
  • BREAKING-NEWS சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு
  • BREAKING-NEWS முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

நாய்களும் இனி பேசப்போகின்றன... தயாராகும் டெக்னாலஜி!

dogs-cats-could-speak-human-language-with-help-of-pet-translator-in-less-than-a-decade

மனிதர்களுடன் நாய்கள் பேசும் அதிநவீன டெக்னாலஜியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

நாம் வீட்டில் வளர்க்கும் நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை, மனிதர்களிடம் பேசுவது போலவே பேசி வளர்கிறோம். நாளடைவில் நாம் பேசுவதை உணர்ந்து அவை செயல்படுவதும் உண்டு. சில நேரங்களில் செல்லப்பிராணிகளின் செயல்களை வைத்து, அவற்றின் தேவைகளை நம்மால் உணர முடிகிறது. இந்நிலையில் நாய்கள் செய்யும் சைகைகள், குரைக்கும் விதம், வாலை ஆட்டும் செயல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் அதிநவீன டெக்னாலஜி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் கான் ஸ்லோபோட்சிகாஃப் என்ற விஞ்ஞானி கடந்த 30 வருடமாக புல்வெளி நாய்கள், பேசும் விதம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக கூறும் அவர், நாய்கள் மனிதர்களுடன் பேசும் டெக்னாலஜியை தயாரித்து வருவதாகவும், அதற்கான ஆராய்ச்சிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களின் குரைக்கும் ஓசைகள் மற்றும் அவற்றின் செயல்கள் தொடர்பான வீடியோக்களை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் புல்வெளி நாய்களின் செயல்களை ஆங்கிலத்திற்கு மாற்றவுள்ளதாகவும், பின்னர் அந்த டெக்னாலஜியை எளிதில் செல்லப்பிராணிகளுக்கு மாற்ற இயலும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆய்வு பத்து ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close