[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரை கவுரவித்த கூகுள் டூடுல்

google-doodle-honors-homai-vyarawalla

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரான ஹோமை வியாரவல்லா பிறந்த தினம் இன்று. இதனையடுத்து கூகுள், டூடுல் மூலம் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஹோமை வியாரவல்லா. குஜராத்தில் சூரத் அருகே நவ்சாரி பகுதியில் ஒரு பார்சி குடும்பத்திற்கு 1913 டிசம்பர் 9 அன்று பிறந்தார். இவர் 1930களில் தனது புகைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில், அவரது படங்கள் அவர் கணவரின் பெயரில் வெளியிடப்பட்டன. 

1942ம் வருடம் டெல்லிக்கு குடி பெயர்ந்த இவர் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீசஸில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் இந்திய சுதந்திரத்தின் முக்கிய நிகழ்வுகளை ஹோமை படம் பிடித்துள்ளார். காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல இந்தியத் தலைவர்களின் புகைப்படங்களை எடுத்தபின்னர் தான் அவரது பணி அங்கீகரிக்கப்பட்டது. 

அவரது புகைப்படங்கள் பெரும்பாலானவை "தல்டா 13" என்ற புனைப்பெயரின் கீழ் வெளியிடப்பட்டன. இந்த பெயரைத் தேர்ந்தெடுத்த காரணம், அவர் 1913 ஆம் ஆண்டு பிறந்தார், 13 வயதில் தன் கணவனை சந்தித்தார். மேலும் அவரது முதல் காரின் எண்  "DLD 13 " . இந்திய அரசு 2011ம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷன் விருது அளித்து சிறப்பித்தது. அவரது 104 வது பிறந்த நாளின், கூகுள்  நிறுவனம் டூடுல் மூலம் அவருக்கு மரியாதை செலுத்தியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close