[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
அறிவியல் & தொழில்நுட்பம் 22 Nov, 2017 12:20 PM

இன்றைய கூகுள் டூடுலில் இடம்பெற்றிருக்கும் பெண் யாரென்று தெரியுமா?

do-you-know-who-s-the-girl-in-today-s-google-doodle

இன்றைய கூகுள் டூடுலில் இடம்பெற்றிருக்கும் பெண், இந்தியாவின் முதல் பெண் மருத்துவ பயிற்சி பெற்ற ருக்மாபாய் ராவத். அவருடைய 153வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தேடல் நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மும்பையில் 1864 நவம்பர் 22 ஆம் தேதி பிறந்த ருக்மாபாய் தனது சிறு வயதில் தந்தையை இழந்தவர். அதன் பின்பு தனது தாயார் மறுமணம் செய்துக் கொண்டதால் வளர்ப்பு தந்தையின் நிழலில் மிகவும் சுதந்திரமாக வளர்ந்தார். ருக்மாபாய்க்கு அவரின் 11வது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பல்வேறு கனவுகள், லட்சியத்துடன் வாழ்ந்த அவருக்கு இந்த திருமணம் மிகப்பெரிய தடங்கலாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத ருக்மாபாய் தனது கணவருடன் செல்லாமல், வீட்டிலேயே இருந்து முறையாக கல்வி பயின்று வந்தார்.

அதன் பின்பு 1885 ஆம் ஆண்டு அவர் தனக்கு நடந்த குழந்தை திருமணத்தில் இருந்து விடுதலை தரும்படி நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு மனு தாக்கல் செய்தார். அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் திருமணத்தில் இருந்து விவாகரத்து கேட்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது. அதனால் ருக்மாபாய் சிறைக்கு அனுப்பபட்டார். சிறை சென்றும் தனது கல்வியை முறையாக பயின்று பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். அதன் பின்பு முறையான விவாகரத்து பெற்று வெளியில் வந்த ருக்மாபாய் லண்டன் மகளிர் மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்து சூரத் நகரில் உள்ள மகளிர் அரசு மருத்துவமனையில் சுமார் 35 ஆண்டுகள் மருத்துவராக பணிப்புரிந்தார்.

தந்தையை இழந்த ருக்மாபாய், தனியொரு பெண்ணாக நின்று வாழ்க்கையில் சாதித்து பல பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து மறைந்துள்ளார். இவரின் 153வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மிகப்பெரிய தேடல் நிறுவனமாக கூகுள் இன்று சிறப்பு கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டு ருக்மாபாய் ராவத்தை சிறப்பித்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close