[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

வாட்ஸ் அப்பில் செய்திகளை அழிக்கும் வசதி அறிமுகம்

whatsapp-s-new-delete-for-everyone-feature-can-be-a-day-saver-for-many

குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு அனுப்பிய செய்திகளை நீக்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் செயலி ‘வாட்ஸ் அப்’ . தகவல்களை எழுத்துகள், படங்கள், வீடியோ மூலம் உறவினர்களுக்கு அனுப்புவதற்கு இந்த செயலி பெரிதும் பயன்படுகிறது. பயனீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, வாட்ஸ் அப் தன்னை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆப் மூலம் நாம் பிறருக்கு அனுப்பும் தகவல்களை அழிக்க இயலாது என்பதால் அது போன்ற வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருந்தது. தகவல்களை குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டால் அதனை அழிக்கும் வசதி, வாட்ஸ் அப்பில் இல்லாததால் பயனீட்டாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக தெரிவித்திருந்தனர். 

இதனை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் தற்போது  தகவல்களை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயனீட்டாளர்கள் தாங்கள் அனுப்பிய தகவல்களை 7 நிமிடங்களுக்குள் அழித்து விட வேண்டும். அதற்கு மேல் காலம் எடுத்துக் கொண்டால் அழிக்க முடியாது.இது பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனை மிகவும் எளிய முறையில் செய்யலாம். அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் ஆப்பில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close