[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

சியோமியின் தீபாவளி ஆஃபர்

xiaomi-diwali-with-mi-sale-will-see-offers-on-all-products-starts-september-27

பிரபல சீன நிறுவனமான சியோமி நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. 

சியோமி, ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 27-ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்கி, 29-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. Mi செயலியில் பிட் டு வின் சலுகை தினமும் மதியம் 2.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு வழங்கப்படும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26-ம் தேதி மதியம் 12.00 மணி முதல் Mi டோக்கன்களை கொண்டு சலுகை கூப்பன்களை பெற முடியும். சியோமி தளத்தில் தி டியா ஹன்ட் பரிசுபோட்டியில் கலந்து கொண்டு சலுகை கூப்பன்களை பயன்படுத்தி சியோமி பொருட்களை பெறலாம். மேலும், இந்த டோக்கன்கள் மூலம் ரூ. 500 வரை தள்ளுபடியும் பெற முடியும்.

சியோமி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1 பிளாஷ் விற்பனை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் இந்த ரூ.1 பிளாஷ் விற்பனை மூலம் ரூ.1க்கு சியோமியின் சாதனங்களை வாங்கலாம். சியோமியின் இந்த பிரத்யேக சிறப்பு விற்பனை செப்டம்பர் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை காலை 11.00 மணி மற்றும் மாலை 5.00 மணிக்கு நடைபெறும். இந்த விற்பனையில் ரெட்மி நோட் 4 உட்பட பல சாதனங்களை பெறலாம். மேலும் தகவல்களை Mi.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close