[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

9 வயது சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பிய நாசா

9-year-old-boy-pens-letter-to-nasa-to-apply-for-job-to-protect-the-earth

கிரகங்களை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவனுக்கு நாசா பதில் கடிதம் அனுப்பி சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூமியை ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து கிரகங்களை பாதுகாக்கும் அதிகாரியை நாசா நியமிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.  இதை அறிந்த நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஜேக் டேவிஸ் என்ற சிறுவன், ’என்னை என் சகோதரி ஏலியன் என்று அழைப்பார். பூமியின் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு வயது வேண்டுமானால் 9 இருக்கலாம் ஆனால், இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என்று நான் நினைக்கிறேன் என்று கடிதம் ஒன்றை எழுதி நாசாவிற்கு அனுப்பினான். நாசாவிற்கு ஜேக் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில். ஜேக் எழுதிய கடிததிற்கு நாசாவின் கிரக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் எல். கிரீன் ரால், ஜக் டேவிஸின் உயர்வான எண்ணத்தையும், ஆர்வத்தையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஜேம்ஸ் எழுதிய கடிதத்தில், டியர் ஜேக் உன் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். இந்த பதவி மிகவும் முக்கியமானது. சந்திரன், விண்கற்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து சில மாதிரிகள் மீண்டும் கொண்டு வரும்போது, சிறிய நுண்ணுயிரிகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பது அவசியம். சூரிய கிரகணத்தை நாம் கவனமாக ஆராய்ந்து பார்ப்பது போல, பிற கிரகங்கள் மற்றும் நிலங்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராய்வதுதான் இந்த வேலையின் முக்கிய நோக்கம். அதற்கு நாங்கள் நல்ல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நியமிக்க உள்ளோம். நீங்கள் இப்போது தான் பள்ளியில் படித்து வருகிறீர்கள். நன்றாக படியுங்கள் வருங்காலத்தில் கண்டிப்பாக நீங்கள் நாசாவில் பணி புரியலாம். நாசாவில் வேலை செய்ய என் வாழ்த்துக்கள்" என பதில் கடிதம் எழுதியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close