[X] Close
JUST IN
 • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
 • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
 • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
 • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
 • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
 • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
 • BREAKING-NEWS கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இலங்கை அணி எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் சர்வ சாதாரணமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து ஆர்.கே. நகரில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆய்வு
 • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததாக ஸ்டாலின் புகார்
 • BREAKING-NEWS ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல்
அறிவியல் & தொழில்நுட்பம் 25 Jul, 2017 01:28 PM

கடவுள் துகள் போல தேவதை துகளும் உண்மையே: ஆய்வு தகவல்

angel-particle-that-is-its-own-antiparticle-discovered-after-80-year-long-hunt-has-been-revealed

அறிவியல் உலகில் 80 ஆண்டுகளாக வெறும் கருத்தாக மட்டும் இருந்த தேவதை துகள் என்ற ஒன்றை தற்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏன் இந்த துகள் முக்கியத்துவம் பெருகிறது என்றால், தேவதை துகள் தனக்குள்ளேயே எதிர் துகளை கொண்டுள்ளதே காரணம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அணுக்களின் ஒன்றிணைவே ஆகும். அந்த அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் தவிர கண்டுபிடிக்கப்படாத பல துகள்கள் உள்ளன. குறிப்பாக கடவுள் துகள் என்று கூறப்படக்கூடிய துகள் சில வருடங்களுக்கு முன்புதான் கண்டறியப்பட்டது.

கடவுள் துகள் என்றால் என்ன?

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. அறிவியலின் கூற்றுப்படி சுமார் 13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகின. பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக கூறப்படுகிறது. எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற அனைத்தும். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான். இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது. இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டது.

தேவதை துகள்:

இதே போல 1928 ஆம் ஆண்டு பால் டிரக் என்ற இயற்பியலாளர், அனைத்து அடிப்படைத் துகள்களுக்குள்ளும் அதற்குரிய எதிர் துகள்கள் உண்டு என்றும், அவை ஒரே மாதிரியான, எதிர் விசை கொண்ட இரட்டைகள் என்று கூறினார்.

பின்னர் 1937 ஆம் ஆண்டு எட்டோர் மஜோரனா என்ற இயற்பியலாளர், ஃபெர்மைன் என்ற துகள்களுக்குள் எதிர் சக்தி கொண்ட துகள்கள் உள்ளன என்று அனுமானித்துக் கூறினார். இந்த துகள்கள்தான் தேவதை துகள்கள் எனப்படுகின்றன. தேவதை துகள்கள் குறித்த எட்டோரின் அனுமானம் தற்போது உண்மையாகி உள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு மற்றும் கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது தேவதை துகள் இருப்பதற்கான சான்றுகளை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 80 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு முடிவு கிடைத்துள்ளது. மேலும் தேவதை துகள் குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு இயற்பியல் உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close