[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் களமிறங்கும் ஃபேஸ்புக்

facebook-working-on-a-modular-smartphone-reveals-patent

2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் தற்போது சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ளது.  ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகளையும் அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

மாடுலர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள தகவல்களின்படி மாடுலர் ஸ்மார்ட்போன் தயாரிக்க காப்புரிமையை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, ஸ்பீக்கர், ஜிபிஎஸ், மைக்ரோபோன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 

இந்த புதிய வகை கருவியானது லெகோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவாகி உள்ளது. இதில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் மெயின் சேசிஸ், 3டி பிரின்டிங் மூலம் செயல்படக் கூடிய மாடுல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. பேட்டரித் திறன், கேமரா, ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்கள் சாதாராண ஸ்மார்ட்போன்களை விட சிறப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இந்த போன்கள் சந்தையில் களமிறங்கும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close