[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

வீதியை மட்டுமல்ல; இனி விண்வெளியையும் கூகுள் மேப் மூலம் பார்க்கலாம்..!

google-street-view-lands-on-the-international-space-station

உலகின் பல பகுதிகளையும் படம் பிடித்து, எங்கு வேண்டுமானாலும் எளிதாகப் பயணம் செய்யக்கூடிய வசதியை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ தருகின்றது. இதன்மூலம் உங்கள் கணினியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station) தெளிவாகப் பார்க்க முடியும்.

கடந்த 16 ஆண்டுகளாக விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பூமிக்குள் பயன்படுத்தப்பட்ட கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ, பூமிக்கு அப்பால் சென்று விண்வெளியிலும் காலடி பதிப்பதற்கான முயற்சிகளில் கூகுள் மேப் இறங்கியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தினை கூகுள் மேப்பில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் 360 டிகிரி புகைப்படங்களை எடுத்து கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி வருகின்றனர். மேலும் இந்தக்குழு மார்ஷல் ஸ்பேஸ் சென்டரில் டிஎஸ்எல்ஆர் கேமராக்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி படங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

முன்னதாக, 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமானது முதன்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்டெராக்டிவ் முறையில் (Interactive) பயணம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியது. அதன்பின் நாசா செவ்வாய் கிரகத்திற்கு மாயத்தோற்ற முறையில் (Virtual Reality) பயணம் செய்யும் வசதியை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது அந்நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை கூகுள் மேப் உடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close