[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல நாட்டின் பிரதமர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்ற
  • BREAKING-NEWS நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் - சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
  • BREAKING-NEWS எனது மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது - போரூர் சிறுமியின் தந்தை பாபு
  • BREAKING-NEWS சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு
  • BREAKING-NEWS தினகரன் தனது அணிக்கு குக்கர் சின்னம், பெயர் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து -ஸ்டாலின்

ரூ.999-க்கு நோக்கியாவின் ஸ்மால் ஃபோன்

nokia-105-nokia-130-feature-phones-launched-in-india

ஹெ.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா மொபைல்கள் மீண்டும் மொபைல் உலகை ஆள வருகிறது. அந்த வகையில் நோக்கியா 3, நோக்கியா 5 போன்ற ஸ்மார்ட்ஃபோன்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது முதன்முதலாக அறிமுகப்படுத்திய நோக்கியா 3310 மாடலை போன்று குட்டி மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 ஆகிய மொபைல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்கியுள்ளன.

நோக்கியா 105 மாடல் 1.8 இன்ச் டிஸ்பிளே, 15 மணிநேரம் பேட்டரி பேக்அப் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் நோக்கியா மொபைலின் புகழ்பெற்ற ஸ்னேக் கேம், டூடுல் ஜம்ப், க்ராஸி ரோடு போன்ற கேம்களும் இதில் உள்ளன. 500 மெசேஜ்கள் மற்றும் 2000 மொபைல் எண்களை ஸ்டோர் செய்து வைக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் களமிறங்கும் இந்த மாடலில் எஃப்.எம், ரேடியோ போன்ற வசதிகளும் உள்ளது. ஒரு சிம் போடும் வசதி கொண்ட நோக்கியா 105 மொபைல் ரூ.999-க்கும் ஜூலை 19 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. நோக்கியா 105 மாடலில் இரண்டு சிம் வசதி கொண்டது ரூ.1149-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 130 மாடலும் 1.8 இன்ச் டிஸ்பிளே தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரி கார்டு போடும் வசதி உண்டு. எஃப்.எம், ரேடியோ போன்ற வசதிகளுடன் கேமரா வசதியும் உள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கபடவில்லை.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close